Latest

ஒரு வார அவகாசம்: மூத்த அமலாக்க அதிகாரிகளுக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை

புத்ராஜெயா, ஜனவரி 28 – மூத்த அமலாக்க அதிகாரிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றத் தயாரா என்பதை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக எச்சரித்துள்ளார்.

தவறுகள், ஊழல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாதவர்கள் பதவி விலகி, கீழ்நிலைப் பதவிகளுக்கு மாற்றம் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

நிதி குற்றங்கள் தொடர்பான துறைகள் மற்றும் அமலாக்க அமைப்புகளின் தலைவர்களுடன் இன்று நிதியமைச்சகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசினார். இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail, காவல் துறை தலைவர் Datuk Seri Mohd Khalid Ismail, MACC தலைமை ஆணையர் Tan Sri Azam Baki மற்றும் சட்டத்துறை தலைவர் Tan Sri Mohd Dusuki Mokhtar ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆக்கிரமிப்பு, கடத்தல், ஊழல் போன்ற நடவடிக்கைகளை இனி சகிக்க முடியாது என்றும் சவால்களை எதிர்கொள்ளத் தயாரில்லாதவர்கள், மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அமலாக்க அமைப்புகளின் தலைமைத்துவம் ஒன்றிணைந்து செயல்பட்டு, நேர்மை, உண்மை மற்றும் நீதியை காக்க வேண்டிய நேரம் இது என்றும், இது செயல்பட வேண்டிய காலம் என்றும் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!