Latestவிளையாட்டு
ஓனானா ரசிகரை தள்ளிய சர்ச்சை; கேமரூன் அதிர்ச்சி தோல்வி

கேமரூன், செப்டம்பர் 11 – மான்செஸ்டர் யுனைடெட் கோல்கீப்பர் அண்ட்ரே ஓனானா (Andre Onana) கேப் வெர்ட் (Cape Verde ) அணியிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் 29 வயதான ஓனானா, எதிரணி கோலுக்கு முன்னர் தவறான மதிப்பீடு செய்ததால் அனைவராலும் குற்றம்சாட்டப்பட்டார்.
மேலும் போட்டி முடிந்தபின், அவரை அணுகிய ரசிகரை அவர் தள்ளிய காட்சி வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது
இந்த தோல்வியால் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்ட கேமரூன் குழுவின் விளையாட்டு வீரர் ஓனானா விரைவில் திராப்சோன்ஸ்போருக்கு (Trabzonspor) கடனாக மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியான பிழைகளும், புதிய கோல்கீப்பர் சென்னே லாமென்ஸ் (Senne Lammens) வருகையும், அவரின் எதிர்காலத்தை ஒல்டு ட்ராஃபோர்டில் சந்தேகமாக்கியுள்ளது.



