Latestமலேசியா

கடந்தாண்டை விட இவ்வாண்டு 20% முதல் 40% அதிகமாக மழைப் பெய்யும்; MET Malaysia தகவல்

கோலாலம்பூர், நவம்பர்-7, நாட்டில் கடந்தாண்டை விட இவ்வாண்டு வடகிழக்கு பருவமழையின் போது 20 முதல் 40 விழுக்காடு அதிகமாக மழைப் பெய்யக் கூடும்.

இவ்வாண்டு வடகிழக்கு பருவமழையும் லா நினா நிகழ்வும் ஒரு சேர வருவதே அதற்குக் காரணமென, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia கூறியது.

தீபகற்ப மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலங்கள், சபாவின் வட மற்றும் கிழக்கு பகுதிகளில் அதில் அதிகம் பாதிக்கப்படலாமென, MET Malaysia தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip தெரிவித்தார்.

மலேசியாவில் இம்முறை லா நினா நிகழ்வு பலவீனமான மற்றும் நடுத்தர அளவில் இருக்கும்; மழைப்பொழிவில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடாது என்றார் அவர்.

என்றாலும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஏதுவாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் உத்தரவின் படி, அனைத்து பேரிடர் மேலாண்மை நிறுவனங்களும் முழு தயார் நிலையிலிருக்க வேண்டும் என Mohd Hisham கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!