
அம்பாங், நவம்பர்-7, நேற்று சிலாங்கூர் அம்பாங்கில் காணாமல் போன 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணம் திரும்பப் கிடைத்துள்ளது.
அப்பணம் வைக்கப்பட்டிருந்த பை, அது காணாமல் போனதாகக் கூறப்பட்ட சில மணி நேரங்களிலேயே காரோட்டி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிலாங்கூர் போலீஸ் துணைத் தலைவர் டத்தோ எஸ். சசிகலா தேவி இன்று அதனை உறுதிபடுத்தினார்.
Ampang Point Mall பேரங்காடியில் உள்ள ஒரு வங்கியிலிருந்து நேற்று பாதுகாப்பு நிறுவனத்தின் வேனில் எடுத்துச் செல்லும் போது, அப்பணப் பை சாலையில் விழுந்திருக்கின்றது.
இந்நிலையில், அதனைக் கண்டெடுத்து போலீசிடம் ஒப்படைத்தவர், பாதுகாப்பு வேனிலிருந்தவர்கள் உள்ளிட்டோரின் வாக்குமூலங்களைப் போலீஸ் பதிவுச் செய்து வருகிறது.