Latestமலேசியா

கட்டணத்தை கணிசமாக உயர்த்திய மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம்

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-4, மருத்துவ ஆலோசனை, வார்ட்டில் தங்குவது, சேவைக் கட்டணம் ஆகியவற்றுக்கு கணிசமான கட்டண உயர்வை மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் அறிவித்துள்ளது.

நடப்பிலுள்ளதை விட மும்மடங்கு அதிகமான புதியக் கட்டண விகிதம், ஜனவரி 1 முதல் அமுலுக்கு வந்துள்ளது.

மருத்துவப் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலைகள் அதிகரித்து வருவதே கட்டண உயர்வுக்குக் காரணமென, அறிக்கையொன்றில் அது விளக்கியது.

அவ்வகையில், பொது கிளினிக் மருத்துவர்களைப் பார்க்கும் கட்டணம் 5 ரிங்கிட்டிலிருந்து 15 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது, மருத்துவ நிபுணர்களின் ஆலோசகக் கட்டணம் 30 ரிங்கிட்டிலிருந்து 80 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது, பெரியவர்கள் தனி வார்டில் தங்குவதற்கான கட்டணம் 120 ரிங்கிட்டிலிருந்து 300 ரிங்கிட்டுக்கு உயர்ந்துள்ளது.

மற்ற புதியக் கட்டண விகிதங்கள் முறையே – குழந்தைகளை வார்ட்டில் சேர்க்க 270 ரிங்கிட், பெரியவர்களுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுக் கட்டணம் 500 ரிங்கிட், குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 650 ரிங்கிட் மற்றும் பிரசவ வார்ட்டில் சேர்க்க 700 ரிங்கிட் ஆகும்.

அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் வசதிகளை வழங்கும் அதே வேளையில், தனியார் மருத்துவமனைகளை விட தாங்கள் விதிக்கும் கட்டணம் இன்னும் குறைவாகவே உள்ளதாக, University Hospital என பரவலாக அழைக்கப்படும் அம்மருத்துவ மையம் கூறிற்று.

இலாபத்தை அதிகரிக்கும் நோக்கில் கட்டணம் உயர்த்தப்படவில்லை; மாறாக நோயாளிகளுக்கான நீடித்தச் சேவையை உறுதிச் செய்யவே என அம்மையம் மேலும் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!