கட்டுமான பகுதியில் சிமெண்ட் டிரக் கவிழ்ந்தது – ஓட்டுநர் மரணம்

ஜோர்ஜ் டவுன், பிப் 6 – பினாங்கு மருத்துவமனைக்கு அருகே
Jalan Residensi யிலுள்ள கட்டுமான பகுதியில் சிமெண்ட் டிரக் லோரி ஒன்று கவிழ்ந்த விபத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 35 வயதுடைய ஓட்டுநர் மரணம் அடைந்தார்.
இன்று காலை மணி 11.35 அளவில் அவசர அழைப்பை பெற்றதைத் தொடர்ந்து Jalan Perak தீயைணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்தனர்.
அந்த வாகனத்தின் கட்டுப்பாட்டை அதன் ஓட்டுனர் இழந்ததே கட்டுமானம் நடைபெறும் இடத்தில் அது கவிழ்ந்ததற்கு காரணம் என
தொடக்கக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்தது.
ஓட்டுநர் தனது இருக்கையில் சிக்கிக்கொண்டதால் ஜாலான் பேராக் மற்றும் லெபோ பந்தாய் தீயணைப்பு நிலையத்தின் மீட்புப் பணி வீரர்களின் உதவியோடு அவரது உடல் மீட்கப்பட்டது.
இதற்காக தீயணைப்பு வீரர்கள் சிறப்பு கருவிகளை பயன்படுத்தியதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குநர் ஜோன் சாகுன் பிரான்சிஸ்
( John Sagun Francis ) தெரிவித்தார்.



