கண்ட இடங்களில் குப்பைகளை வீசினால் இனி கால்வாய்களையும் கழிப்பிடங்களையும் சுத்தம் செய்ய தண்டனை- ஙா கோர் மிங்
புத்ராஜெயா, செப்டம்பர்-27 – கண்ட கண்ட இடங்களில் குப்பைப் போடுபவரா நீங்கள்?
அதற்காக எச்சரிக்கையும் அபராதமும் விதிக்கப்பட்டும் அடங்கவில்லையா?
அப்படியானால் அடுத்தாண்டு தொடங்கி கால்வாய்களைப் பெருக்கவும், பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யவும் தயாராகுங்கள்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) அவ்வாறு எச்சரித்துள்ளார்.
திரும்பத் திரும்ப அத்தவற்றைப் புரிபவர்களுக்கு தக்கப் பாடம் கற்பிக்கும் வகையில், அந்த சமூகச் சேவை தண்டனை வழங்கப்படவிருக்கிறது.
1976-ஆம் ஆண்டு ஊராட்சி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதும், அது நடைமுறைக்கு வருமென்றார் அவர்.
பொது சுத்தம் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அதுவோர் ஆக்கரமான நடவடிக்கையாகும்.
நோர்வே, சுவீடன், சிங்கப்பூர் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் அது ஏற்கனவே அமுலில் உள்ள ஒன்றுதான்.
உங்களுக்காக பிரத்தியேக T-Shirt-களையும் வழங்குவோம்.
ஒன்றாகக் கூடி கால்வாய்களையும் சாலைகளையும் கூட்டிப் பெருக்குவோம் என்றார் அவர்.