லண்டன், டிசம்பர்-18, கச்சிதமாக வட்ட வடிவிலிருக்கும் ஒரு கோழி முட்டை லண்டனில் 342 டாலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த ‘அரிய’ முட்டை முதன் முதலில் ஸ்காட்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பெண்ணொருவரால் கண்டறியப்பட்டது.
பின்னர் ஓர் ஆடவரிடம் 190 டாலருக்கு அது கைமாறியது.
அவரோ, அதனை நல்லெண்ண காரியத்துக்கு நன்கொடையாக வழங்க, 254 டாலர் விலையில் ஏலம் தொடங்கியது.
கடைசியில் 342 டாலர் விலைக்கு ஓர் ஆடவர் அதனை ஏலத்தில் எடுத்தார்.
தம்மைப் பொருத்தவரை அது ஒரு நல்ல செலவே என அவர் சொன்னார்.
கோழிகள் கனக்கசிதமாக வட்ட வடிவில் முட்டையிடுவது, 1 பில்லியன் முட்டைகளில் ஒரு தடவை தான் நடக்குமெனக் கூறப்படுகிறது.
அண்மைய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அத்தகைய முட்டைகள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.