கோத்தா கினாபாலு, செப்டம்பர் 13 – கனமழை காரணமாக கினாபாலு மலை ஏறும் நடவடிக்கைகள் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, மலையின் உச்சிக்குச் செல்லும் பாதை மூடப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்த கனமழையைத் தொடர்ந்து, நீர் பெருக்கெடுத்து, மலை ஏறும் பாதை ஆறு போல் காட்சியளிக்கின்றது.
மேலும், காற்று மற்றும் மூடுபனியுடன் மலை இருப்பதாகவும், சபா பார்கஸ் (Sabah Parks) முகநூலின் வழி தெரிவித்திருக்கின்றது.
சபா பார்கசில் (Sabah Parks) ஏறுபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையின் போது அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.