கோலாலம்பூர், நவம்பர் 13 – FujiFilm மலேசியா, புதிய கண்ணாடியில்லாத கேமராவான Fujifilm X-M5-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் அதிக செல்வாக்கு செலுத்துபவர்களையும், டிஜிட்டல் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களையும் இலக்காகக் கொண்டு, இந்த புதிய கேமரா வெளியீடு கண்டுள்ளது.
இந்தக் கேமரா 6.2K வீடியோ பதிவை 30fps-யில் வழங்குவதுடன், APS-C X-Trans CMOS 4 சென்சார் மற்றும் உயர் தரப் புகைப்படம் மற்றும் வீடியோ தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
நான்கு திசைகளிலிருந்து ஒலி பதிவு செய்யும் திறனுடன், தெளிவான ஒலியைக் குறைந்த இரைச்சல் சத்தத்துடன் பதிவு செய்யும் மைக்ரோஃபோனு இதில் இணைக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியிலிருந்து விற்பனைக்கு வரவிருக்கின்ற இந்தக் கேமராவின் விலை 3,948 ரிங்கிட்டாகும்.
அதேவேளையில், லென்ஸ் பேக்கேஜ் 4,398 ரிங்கிட் விலையில் விற்கப்படும்.
இது குறித்த கூடுதல் தகவலுக்கு, Fujifilm வலைத்தளத்தை வலம் வந்து அறிந்து கொள்ளலாம்.