கலப்பு மரபின வீரர்கள் சர்ச்சை; FAM-மின் மேல்முறையீட்டை நிராகரித்த FIFA

கிளானா ஜெயா, நவம்பர்-4 – அனைத்துலகக் கால்பந்து சம்மேளமான FIFA, மலேசியக் கால்பந்து சங்கமான FAM தாக்கல் செய்த மேல்முறையீட்டை நிராகரித்துள்ளது.
நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் FAM அதனை உறுதிப்படுத்தியது.
இதையடுத்து, 7 கலப்பு மரபின வீரர்களை உட்படுத்திய போலி ஆவண சமர்ப்பிப்பு சர்ச்சையில் FAM-முக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிலைநிறுத்தப்படுகிறது.
FAM-க்கு 1.8 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,
ஒவ்வொரு வீரருக்கும் 12 மாத தடை மற்றும் 11,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளதால், FAM அனைத்துலக விளையாட்டு நடுவர் மன்றத்தை நாடவும் வாய்ப்பு உள்ளது.
இந்தத் தீர்ப்பு, கலப்பின வீரர்களை சேர்க்குக் விஷயத்தில் இனி முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் மலேசியக் கால்பந்து துறைக்கும் பெரும் பின்னடைவு என கால்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.



