
வாஷிங்டன், அக் 7 –
கலிபோர்னியா நெடுஞ்சாலையில் மருத்துவ ஹெலிகாப்டர் சாலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
அந்த சம்பவத்தைத் தொடர்ந்து போக்குவரத்து சாலைகளை உள்ளூர் அதிகாரிகள் மூடினர். நேற்று இரவு ஏழு மணியளவில் மாநில தலைநகர் Sacramentoவில் கிழக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலை 50 இல் அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதற்கு முன்னதாக சில நிமிடங்களுக்கு முன்பு UC டேவிஸ் மருத்துவ மையத்திலிருந்து அந்த ஹெலிகப்டர் புறப்பட்டதாகக் தரவுகள் மூலம் தெரியவருகிறது.
ஹெலிகாப்டரில் நோயாளிகள் எவரும் இல்லையென்பதோடு, விபத்து நிகழ்ந்தபோது சாலையில் வாகனங்கள் எதுவும் இல்லையென்றும் கூறப்பட்டது.
சாலையில் வரிசையாக இருந்த கார்களுக்கு உயரே ஹெலிகாப்டர் வட்டமிட்டதோடு, பின்னர் விபத்துக்குள்ளாகி, புகை மூட்டம் ஏற்பட்டதையும் சமூக வலைத்தளங்களில் பதிவான காட்சியில் காணமுடிந்தது.