பிரிக்பீல்ட்ஸ், அக்டோபர் 10 – தீபாவளி நெருங்குகிறது. மக்கள் புத்தாடைகள், பலகாரப் மற்றும் அலங்கார பொருட்களை வாங்க தீவிரம் காட்டி வருகின்றனர்.
எப்போதும் போலவே இவர்களுக்காக காத்திருக்கிறார்கள் வியாபாரிகள். அதற்காக பிரத்தியேகமாக தீபாவளி சிறப்பு கடைவீதிகளும் போடப்பட்டு விட்டன.
இந்நிலையில் பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவை நோட்டம் விட வணக்கம் மலேசியா களம் இறங்கியது.
இதோ இதுதான் அங்குள்ள சூழல்.
இன்னும் 21 நாட்களே தீபாவளிக்கு எஞ்சியுள்ள நிலையில்,தற்போதைய இந்த சூழல் நாட்கள் நெருங்க நெருங்க மேலும் பரபரப்பு ஆகும் என்பது திண்ணம்