Latestமலேசியா

கள்ளநோட்டு அச்சடித்த கும்பலில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் கைது

ஈப்போ, பிப் 5 – ஜோகூர் பாரு, பிப்ரவரி-5 – கள்ளநோட்டு அச்சடித்த கும்பலில் ஈடுபட்ட சந்தேகத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் திங்கட்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

தங்களது வளாகத்தில் கள்ள நோட்டு பயன்படுத்தப்பட்டது குறித்து ஜனவரி 29 ஆம் தேதியன்று Kerian னில் உள்ள ஆடை வளாகங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களின் உரிமையாளர்களிடமிருந்து மூன்று புகார்கள் கிடைக்கப் பெற்றதாக பேரா இடைக்கால போலீஸ் தலைவர் சுல்கப்லி சரியாட் ( Zulkafli Sariaat) தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பூசிங்கிலுள்ள (Pusing) ஆடை வளாகங்கள் கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 26 முதல் 36 வயதுடைய இரண்டு ஆடவர்கள் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிமிருந்து 100 ரிங்கிட்டுக்கான மூன்று கள்ள நோட்டுக்களும் 20 ரிங்கிட் கள்ள நோட்டு ஒன்றும், ஆறு கைத் தொலைபேசிகள், கையடக்க கணனி , A 4 காகிதங்கள் மற்றும் போலி பதிவு எண் பட்டையைக் கொண்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்ததில் சம்பந்தப்ட்டதோடு அந்த நோட்டுக்களை எண்ணெய் ஊற்றுவதற்கும் கைதொலைபேசியில் பண மதிப்பை கூட்டுவதற்கும் பயன்படுத்தியுள்ளனர் .

மேலும் சமூக வலைத்தளத்தின் மூலம் விவேக தொலைபேசியை வாங்குவதற்கு கள்ளப் பணத்தை செலுத்திய பின்னர் தப்பியோடினர்.

ஈப்போ, பத்து காஜா, Manjung, Kuala Kangsar மற்றும் Kerianனில் கள்ள நோட்டுக்களை பயன்படுத்தி 9 குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டனர் என முன்னோடி விசாரணையில் தெரியவந்ததாக சுல்கப்லி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!