![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2025/02/264c7072-6346-4552-a8df-be6d8fb50bc6.jpg)
கோலாலம்பூர், பிப்ரவரி-8 – வணக்கம் மலேசியா செய்தி ஊடகத்தின் பெயரில் பொறுப்பற்ற தரப்பினரால் போலி சமூக ஊடகப் பக்கங்கள் திறக்கப்பட்டு, அதன் பெயர் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக வணக்கம் மலேசியா பெயரில், அதன் சின்னத்தைப் பயன்படுத்தி சில facebook பக்கங்கள் உலா வருகின்றன.
அண்மையில் இது போன்ற இரு சம்பவங்கள் கண்டறியப்பட்டு வணக்கம் மலேசியா சார்பில் முறைப்படி புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வணக்கம் மலேசியா பெயரைப் பயன்படுத்தி மக்களைக் குழப்பும் இன்னொரு சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
அச்சு அசலாக வணக்கம் மலேசியா facebook பக்கத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி facebook பக்கத்தை நம்பி, ஒரு வழக்கறிஞரே ஏமாறப் பார்த்தார்.
ஜோகூர் பாருவைச் சேர்ந்த நிறுவனத்தால் Earbuds, speaker போன்ற கருவிகள் பெரும் விலைக் கழிவுச் சலுகையில் விற்கப்படுவதாக அந்த போலி facebook பக்கத்தில் செய்திப் பரவியுள்ளது.
சற்று ஆராயாமல் இருந்திருந்தால், அந்த போலி பக்கத்தை நம்பி தானும் மோசடிக்கு ஆளாகியிருப்பேன் என அந்த வழக்கறிஞரும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
‘Vanakkam Malaysia’ என்ற பெயரில் காணப்படும் facebook பக்கம் மட்டுமே எங்களின் ஒரே அதிகாரப்பூர்வ பக்கமாகும்.
ஆக, இந்த போலி facebook பக்கத்திற்கும் வணக்கம் மலேசியாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை.
முந்தையச் சம்பவங்கள் போலவே இந்த ஆகக் கடைசி சம்பவம் தொடர்பிலும் வணக்கம் மலேசியா நிர்வாகம் புகார் செய்துள்ளது.
ஒவ்வொரு முறையும் பொறுப்பற்ற தரப்புகளால் இப்படி வணக்கம் மலேசியாவின் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, வாசகர்களுக்கு நிர்வாகம் உரிய விளக்கங்களை அளித்து வருகிறது.
எனவே, வணக்கம் மலேசியா பெயரில் இது போன்ற தவறான போலியான செய்திகளைக் கண்டால் எளிதில் நம்பி விடாமல், எங்களின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் வாயிலாக பொது மக்கள் உறுதிச் செய்துக்கொள்ளலாம்.
அல்லது வணக்கம் மலேசியா அலுவலகத்திற்கு நேரடியாக அழைத்து உறுதிச் செய்துக்கொள்ளலாம்.
வணக்கம் மலேசியா பெயரைப் பயன்படுத்தி தவறான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதை நிர்வாகம் உறுதிச் செய்யும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.