Latestமலேசியா

காசாவில் போர் நிறுத்த அறிவிக்கப்பட்டுள்ளதால் Starbucks புறக்கணிப்பு இனியும் தேவையற்றது; Berjaya குழுமத்தின் வின்சென்ட் தான் கருத்து

கோலாலம்பூர், ஜனவரி-9 – காசா முனையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருப்பதால், Starbucks Cofee கடைகளைப் புறக்கணிக்க இனியும் காரணமிருப்பதாக தமக்குத் தெரியவில்லை என, Berjaya குழுமத்தின் நிறுவனர் தான் ஸ்ரீ வின்சென்ட் தான் (Vincent Tan) கூறியுள்ளார்.

அவரின் Berjaya Food Company, மலேசியாவில் Starbucks Coffee கடைகளை நடத்தும் உரிமைமை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2023 அக்டோபரில் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்ததைக் கண்டித்து, பாலஸ்தீன ஆதரவு அமைப்பான BDS தலைமையில் Starbucks உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக புறக்கணிப்பு இயக்கம் தொடங்கியது.

இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டன.

நூற்றுக்கும் மேற்பட்ட Starbucks கடைகள் மலேசியாவில் மூடப்பட்டதாகக் கூட செய்திகள் வெளியாகி, பின்னர் அவை நிராகரிக்கப்பபட்டன.

எனினும் வியாபாரம் படுத்ததால், 3 கடைகளை நிரந்தரமாக மூடி, 25 கடைகளின் செயல்பாட்டை அது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.

இப்படியிருக்க, Starbucks Malaysia-வின் வியாபாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியிருப்பதாக கடந்த ஜனவரி 10-ஆம் தேதி வின்சென்ட் தான் தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கும் Starbucks Malaysia-வுக்கும் தொடர்பில்லை என்பதை மலேசியர்கள் உணரத் தொடங்கியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் 15 மாதங்களுக்குப் பிறகு காசா போரை நிறுத்த இஸ்ரேலும் – ஹமாஸ் தரப்பும் கொண்டுள்ளதால், நாளை முதல் அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வருகிறது.

என்றாலும், மலேசியாவில் தங்களின் புறக்கணிப்பு இயக்கம் தொடருமென, BDS அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!