
ஜார்ஜ் டவுன், மே 21- 2020 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனங்களை மாற்றுவதற்காக, பினாங்கு அரசு, 3,311,895 ரிங்கிட் மதிப்பிலான 15 புதிய ‘தோயோத்தா கேம்ரி’ (Toyota Camry) வாகனங்களை வாங்க முட்பட்டுள்ளதென்று பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் (Chow Kon Yeow) தெரிவித்துள்ளார்.
இவ்வாகனங்கள் பினாங்கு மாநில அரசு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் அரசு அலுவல் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தபடுமென்று அறியப்பட்டுள்ளது.
முன்னதாக, மாநில அரசு நிதி சவால்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் புதிய வாகனங்களை வாங்கும் நடவடிக்கை குறித்து மற்ற அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், சௌ கோன் வாகனங்களின் மொத்த செலவீனங்களில் வரி பணம் மிகுதியான பங்கிலடங்கும் என்பதை விளக்கியுள்ளார்.