கோம்பாக், டிசம்பர்-26 – காராக் நெடுஞ்சாலையின் 28-வது கிலோ மீட்டரில் நேற்று அதிகாலை எண்ணெய் டாங்கி லாரி கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததில், அதன் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
லாரி ஓட்டுநர் 41 வயது உள்ளூர் ஆடவர் ஆவார்.
கிளந்தானிலிருந்து கிள்ளான் துறைமுகம் நோக்கி தனியாளாக லாரியை அவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
அவருக்குக் காயமேதும் ஏற்படவில்லை.
செம்பனை எண்ணெயை ஏற்றியிருந்த அந்த லாரியின் பிரேக் திடீரென வேலை செய்யாமல் போனதே விபத்துக்குக் காரணமென, கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் நூர் அரிஃபின் மொஹமட் நாசிர் (Noor Ariffin Mohamad Nasir) தெரிவித்தார்.
அந்த லாரி, காராக் நெடுஞ்சாலையின் ஒரு வளையில் சாய்ந்து விழும் காட்சி, பின்னால் சென்ற வாகனத்தின் dashcam-மில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.