
கோலாலம்பூர், செப்டம்பர் 12 – டுத்தா உளு கிள்ளாங் நெடுஞ்சாலையில் (Duta-Ulu Klang Expressway) மற்றொரு காரைத் துரத்திச் சென்ற மெர்சிடீஸ் வாகனம் செகம்புட் டோல் பிளாசாவில் விபத்துக்குளானது.
அந்த மெர்சிடீஸ் வாகனம் மற்றொரு வாகனத்தை மிக அருகில் பின்தொடர்ந்து செல்வதையும், முன்னிருந்த வாகனம் வேகமாகச் செல்லும்போதெல்லாம் அந்த மெர்சிடீஸ் வாகனம் அருகில் சென்று சவால் விடுவதையும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட காணொளியில் தெளிவாக காண முடிகின்றது.
முன்னிருந்த கடும் வளைவை கவனிக்காமல் போனதால் மெர்சிடீஸ் ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலைப் பிரிவை மோதி விபத்துக்குள்ளானார்.
ஓட்டுநரின் காயம் குறித்து துல்லியமான தகவல் வெளியாகவில்லை என்றாலும் அக்காணொளியில் பெரும் காயங்கள் எதுவும் தென்படவில்லை.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அக்காணொளிக்கு நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களையும் கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.