Latestமலேசியா

காலஞ்சென்ற முனைவர் சரவணன் P.வீரமுத்துவின் இறுதிப் படைப்புகள் வெளியீடு

பினாங்கு, நவ 13 – மலாய் எழுத்துலகில் ஆளுமையும், தனக்கென தனித்திறனும் கொண்டவராக திகழ்ந்த காலஞ்சென்ற முனைவர் சரவணன் P.வீரமுத்துவின் மூன்று மலாய் இலக்கிய நூல்களின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை நவம்பர் 9 ஆம் தேதி பினாங்கு கோல்ஃப் கிளப்பில் சிறப்பாக நடந்தேறியது.

அவரது ‘Himpunan Puisi’, ‘Citra Identiti Kaum India’, ‘Devi’ ஆகிய நூல்களோடு, அவருடனான நினைவுகள் குறித்த கவிதைத் தொகுப்பு நூலினை Persatuan Karyawan Pulau Pinang இயக்கத்தினர் தொகுத்து வெளியீடு செய்து அவருக்குரிய மரியாதையைச் செலுத்தினர்.

இந்த நிகழ்விற்கு ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் சிறப்பு வருகையளித்து நூல்களை அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்தார்.

“ஒரு படைப்பாளியின் மரணம் என்பது உடலுக்குத்தான். உலகம் இருக்கும் வரை அவரது எழுத்து அவரின் பெயர் சொல்லும். மறைந்த டாக்டர் சரவணன் வீரமுத்துவின் ஆகக் கடைசியான படைப்புகளை வெளியீடு செய்ததில் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கல்வியாளரான இவர் மலாய் எழுத்துலகில் ஒரு மிகப் பெரிய ஆளுமை என்பதை இந்த நிகழ்ச்சியில் அறிய முடிந்ததாக வர்ணித்தார்.

இதனிடையே , தனது கணவரின் இறப்புக்குப் பின்னர், அவரது படைப்புகள் வெளிவரவும், அவருடைய மலாய் மொழிப்புலமையை அனைவரும் அறியவும், அவரது படைப்புகள் இளைய சமுதாயத்திற்கும் மாணவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் பல சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலத்தில் நூல் தொகுப்புப் பணியை நிறைவு செய்து வெளியீடு செய்ததாக முனைவர் சரவணன் அவர்களின் துணைவியார் முனைவர் மனோன்மணி தேவி அண்ணாமலை தெரிவித்தார். முனைவர் சரவணனின் மாணவர்களுக்கும், தமது மாணவர்களுக்கும் அந்த நூல்களை அவர் இலவசமாக வழங்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!