Latestஇந்தியாஉலகம்

காஷ்மீரில் உணவு விஷத்தால் பாதிப்பு:100க்கும் மேற்பட்ட திரைப்பட ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி

காஷ்மீர், லே, ஆகஸ்ட் 18: காஷ்மீர் லேவில் நடைபெற்று வந்த பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உணவு விஷமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு, கடுமையான வயிற்று வலி, தலைவலி மற்றும் வாந்தி ஆகிய அறிகுறிகளுடன் லேவிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

உடனடி சிகிச்சை வழங்கப்பட்டதுடன், பலர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். உணவு மாதிரிகள் ஆய்விற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் விரைவில் விஷம் ஏற்பட்டதற்கான காரணம் தெளிவாகக் கூறப்படும், என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!