
ஸ்ரீ நகர், ஏப்ரல்-26- ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான 2 சந்தேக நபர்களின் வீட்டையும் இந்திய இராணுவம் குண்டு வீசி தரைமட்டமாக்கியுள்ளது.
பஹல்காம் பள்ளத்தாக்கில் 26 பேரை பலிகொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை அடுத்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்களில் ஒருவனது குடும்பம் தங்கியிருந்த வீட்டையும் இராணுவம் குண்டு வீசித் தகர்த்தது.
அவ்விருவரும், ஐநாவால் தடைச் செய்யப்பட்ட பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் துணைப் படையான TRF உறுப்பினர்கள் ஆவர்.
இருவரையும் பிடிக்கும் முயற்சியில் அவர்களின் வரைபடங்களையும் போலீஸ் வெளியிட்டுள்ளது.
அவர்களைப் பிடிக்க தகவல் தருவோருக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அவர்களைப் பிடித்து தண்டிப்போம் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக சூளுரைத்தார்.
இதையடுத்து தேடுதல் வேட்டையில் இந்திய இராணுவம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.