
டெல் அவிவ், மார்ச் 3 – காஸாவுக்குள் (Gaza) உதவிப் பொருட்கள் நுழைவதற்கு உடனடியாக அனுமதிக்கும்படி இஸ்ரேலுக்கு ஐ.நா நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட காஸா வட்டாரத்திற்கான மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்புவதை யூத அரசாங்கம் தடை விதித்த சில மணி நேரங்களுக்குப் பின் ஐ.நா இதனை வலியுறுத்தியது.
காஸாவுக்கு உடனடியாக மனிதாபிமான உதவிப் பொருட்கள் சென்றடைவதகு இஸ்ரேல் அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா தலைமைச் செயலாளர் Antonio Guterres இணையத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டதற்கு ஏற்ப அனைத்து பினையாளிகளும் விடுவிக்கப்பட்டதால் அமைதி முயற்சியில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்படுவதற்கான முயற்சிகளை எல்லாத் தரப்பினரும் தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
காஸாவுக்கான உதவி பொருட்களுக்கு அனுமதி மறுக்கும் இஸ்ரேலின் முடிவு கவலையளிக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதோடு அனைத்துலக சட்டத்தை மீறும் சாத்தியத்தை அது ஏற்படுத்தியுள்ளதாக மனிதாபிமான உதவிளுக்கான ஐ.நா அலுவலகத்தின் தலைவர் Thomas Fletcher தெரிவித்தார்.