
நூக், மார்ச்-30 – தனது முதல் தவணையின் போது கிரீன்லாந்து நாட்டின் மீது ஒரு கண் வைத்திருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது தெரிந்ததே.
ஆனால் கிரீன்லாந்தை எப்படியாவது விலை கொடுத்து வாங்கி விடும் எண்ணத்தை அவர் இன்னும் கைவிடவில்லை என்றே தெரிகிறது.
துணையதிபர் ஜே.டி வான்ஸ் (JD Vance) கிரீன்லாந்துக்கு மேற்கொண்ட குறுகிய காலப் பயணமே, டிரம்பின் ஆசையை வெளிச்சம் போட்டுக் கட்டி விட்டது.
கிரீன்லாந்து மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வான்ஸ் அங்குசென்றார்.
எனினும், தலைநகர் நூக்கிலிருந்து 1,500 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்புத் தளத்தில் சற்று நேரம் இருந்து விட்டு கிளம்பி விட்டார்.
கிளம்பியவர் ‘வாய் சும்மா’ இருக்காமல் கிரீன்லாந்தை தன் வசம் வைத்திக்கும் டென்மார்க்கை கடுமையாகத் திட்டித் தீர்த்தார்.
“300 ஆண்டுகால ஒப்பந்தத்தில் தன்வசமுள்ள கிரீன்லாந்துக்கு டென்மார்க் அப்படி ஒன்றும் பெரிதாக செய்து விடல்லை. இதனால் சீனாவும், ரஷ்யாவும் அங்கு ஆதிக்கம் செலுத்தப் பார்க்கின்றன.எனவே தான் அத்தீவை நாங்கள் கேட்கிறோம். படைபலத்தால் அல்லாமல் பேச்சுவாத்தையின் மூலம் அத்தீவைக் கைப்பற்றியேத் தீருவோம்” என வான்ஸ் அதிரடியாகப் பேசினார்.
அவரின் பேச்சு உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
என்னமோ கிரீன்லாந்து நாட்டின் மீது பெரிய அக்கறை இருப்பதாக டிரம்ப்பும் அமெரிக்காவுக்கும் வெளியில் காட்டிக் கொண்டாலும் உண்மை அதுவல்ல.
கிரீன்லாந்தில் கனிம வளங்கள் கொட்டிக் கிடப்பதே உண்மைக் காரணமாகும்.
அயர்ன் ஓர் (Iron Ore), அலுமினியம் மற்றும் போக்சைட் (Aluminum & Bauxite), யுரேனியம் (Uranium), தங்கம், வைரங்கள், எரி சக்தி வளங்கள் என கிரீன்லாந்தில் இயற்கை வளம் குவிந்துகிடக்கிறது.
அவற்றை எல்லாம் வெட்டி எடுத்து காசாக்கினால், மொத்த அமெரிக்காவுமே 100 ஆண்டுகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு அவை விலைமதிப்புள்ளவை.
எனவே தான் கிரீன்லாந்தை வளைத்துப் போட உலகக் ‘கட்டப்பஞ்சாயத்து’ காரரான அமெரிக்காவும் அதன் அதிபரும் திட்டம் போடுகின்றனர்.
இது, Arctic கண்டத்தில் அமெரிக்கா தொடங்கியுள்ள நாடகத்தின் வெறும் முன்னோட்டமே…போகப் போகத்தான் அமெரிக்காவின் சுயரூபம் வெளிப்படும் என பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர்.