Latestமலேசியா

கிறிஸ்துமஸ் முன்னிட்டு 50 விழுக்காடு டோல் கழிவு

கோலாலம்பூர், டிச 19 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனியார் வாகனங்களுக்கான டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு கழிவை அரசாங்கம் வழங்குகிறது.

இந்த கட்டணக் கழிவு டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் அமலுக்கு வரும் என்று பொதுப் பணி அமைச்சர் அலெக்சாண்டர் நந்தா லிங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தேசிய எல்லை நுழைவாயில்களான Sultan Iskandar கட்டிடத்திலுள்ள டோல் சாவடி , வடக்கு – தெற்கு PLUS நெடுஞ்சலை மற்றும் Tanjung Kupang மலேசிய -சிங்கப்பூர் இரண்டாவது இணைப்பு விரைவுச் சாலையான Linkdua Plaza Tol சாவடியைத் தவிர இதர அனைத்து சாலைகளிலும் இந்த டோல் கட்டண கழிவுத் தொகை சலுகை வழங்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அனைத்து டோல் நெடுஞ்சாலை சலுகைதாரர்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்காக 20.65 மில்லியன் ரிங்கிட் என மதிப்பிடப்பட்ட நிதி தாக்கங்களை அரசாங்கம் ஏற்கும்.

கிறிஸ்துமஸ் பெருநாளுக்கு குடும்ப உறுப்பினர்களைப் பார்க்க அல்லது பள்ளி விடுமுறை காலத்தில் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் செல்ல சொந்த ஊர்களுக்குத் திரும்பத் திட்டமிடும் மலேசியர்களின் பயணச் செலவுகளின் சுமையைக் குறைக்க இந்த 50 விழுக்காடு டோல் கட்டண தள்ளுபடி உதவும் என்று அலெக்சாண்டர் நந்தா லிங்கி நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!