
கிளந்தான், ஏப்ரல் 11 – கிளந்தானில் பாலியல் உறவுக்கு ஆண்களை குறிவைக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கிளாந்தான் போலிஸ் தலைவர் யூசோப் மாமாட் தெரிவித்திருக்கிறார்.
இந்தப் புதிய கலாச்சாரம், அச்சத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2024ல் கிளந்தானில் இளம் வயதினர் தொடர்பான 252 பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இது 22.3 விழுக்காடு அதிகமாகும். விசாரணையில் பொதுவாகவே, சம்மதத்துடன் நடந்த உடலுறவு குற்றங்களாகவே இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சிறுவர்கள் மற்றும் இளையோர் மத்தியில் கட்டுப்பாடு இல்லாத கைப்பேசி பயன்பாடு பாலியல் குற்றங்கள் போன்ற பல சமூக சீர்கேட்டு பிரச்சனைகளுக்கு வித்திடுவதாக கூறியுள்ளார் கிளந்தான் மாநில துணை முவ்தி Nik Abdul Kadir Nik Mohamad.
ஒவ்வொரு குழந்தைகளும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். பெற்றோர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் பாலியல் மற்றும் வன்முறையைத் தூண்டும் படங்களையும் வீடியோக்களையும் பார்க்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது என, இவ்வாண்டு கிளந்தான் மாநிலத்தில் குழந்தைகள் தொடர்பான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது தொடர்பாக கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மசூதிகளிலும், மக்கள் கைப்பேசியிலேயே மூழ்கியுள்ளனர்.
பள்ளிகளில் சரியான கல்வி மற்றும் பெற்றோரின் சீரான கண்காணிப்பு மூலமாகவே இந்த குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியும் என குறிப்பிட்டார்.
அதே வேளை, மசூதிகள், சுராவ்கள் மற்றும் பள்ளிகளிலும் கல்வி நடவடிக்கைகள் மூலம் மாநில அரசாங்கம் தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த, பெற்றோர் தங்களின் பங்களிப்பை ஆற்றவில்லை என்றால், மாநில அரசின் முயற்சிகள் பயனளிக்காது கிளந்தான் மந்திரி பெசார் நசுருதின் டாவுத் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.