Latestமலேசியா

கிள்ளானில் ரசாயன தொழிற்சாலையில் வெடிப்பு; 32 பேர் காயம்

கிள்ளான், ஜன 21 – கிள்ளான் , காப்பார் இன்டா (Kapar Indah) தொழில்மயப் பகுதியிலுள்ள ரசாயன மறுசுழற்சி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 தனிப்பட்ட நபர்கள் காயம் அடைந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் 20 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு இவர்கள் அனைரும் வெடிப்பு நிகழ்ந்த தொழிற்சாலைக்கு அருகே குடியிருந்தவர்கள் என வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ACP S . விஜய ராவ் ( Vijaya Rao) தெரிவித்தார்.

காயம் அடைந்தவர்கள் அனைவரும் உள்நாட்டினர் என்பதோடு இவர்கள் துங்கு அம்புவான் ரஹிமா (Tunku Ampuan Rahimah) மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றனர்.

எனினும் அவர்களில் எவரும் கடுமையான காயத்திற்கு உள்ளாகவில்லை. அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தில் சோதனைகளை மேற்கொள்வதற்காக கிள்ளான் சுகாதாரத்துறை அலுவலகத்தின் பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் போலீஸ் அதிகாரிகள் இன்று மாலையில் அங்கு காணப்பட்டதாக பெர்னாமா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

அலட்சியப் போக்கு மற்றும் லைசென்ஸ் நிபந்தனை மீறப்பட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என சிலாங்கூர் சுற்றுச்சூழல்துறையின் இயக்குநர் (Nor Aziah Jaafar) தெரிவித்தார்.

அந்த தொழிற்சாலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரசாயனத்தின் காரணத்தினால்தான் அங்கு வெடிப்பு ஏற்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் (Datuk Hussein Omar Khan) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!