Latestமலேசியா

கிள்ளான் கம்போங் ஜாவா 3 ஆவது மைல் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச பால்குட ஊர்வலம் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

கிள்ளான் பிப் 4 – கிள்ளான், கம்போங் ஜாவா 3ஆவது மைலில்
அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் இவ்வாண்டு தைப்பூச திருவிழா வழக்கம்போல் பால் குடம் ஊர்வலத்தோடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய வளாகத்தில் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் இம்முறை சிறியோர் முதல் பெரியோர்வரை 450க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

விடியற்காலை 4 மணி முதல் ஆலயத்தில் ஓமம் வளர்க்கப்பட்டதை தொடர்ந்து காலை மணி 5.30 முதல் பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்கள் பால் குடத்துடன் ஆலயத்தை சுற்றி வந்து கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற பால்குட அபிஷேகத்தில் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். இம்முறை தைப்பூச திருநாள் கொண்டாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்து திருமுருகன் பெருமானின் அருட்கடாற்சத்தை பெற்றனர்.

வருகை புரிந்த அனைத்து பக்தர்களுக்கும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டதோடு இதற்கான ஏற்பாடுகளை தன்னார்வத்தோடு சில பக்தர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஆலயத்தில் இவ்வாண்டு தைப்பூச ஏற்பாட்டை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்த ஆலய நிர்வாகக் குழுவினருக்கும் மற்றும் தன்னார்வ முறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அதன் நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவர்களில் ஒருவரான எஸ்.எம் கண்ணன் சிங்காரவேலு நன்றி தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!