Latestமலேசியா

சாலையில் ஓடிக்கொண்டிருந்த பெரோடுவா அல்சா காரை மின்னல் தாக்கியது; திடுக்கிடும் காணொளி வைரல்

கோலாலம்பூர், மே 22 – வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் வாகனமொன்றின் மீது, திடீரென மின்னல் தாக்கிய காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகி வலைய்தளவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

வெள்ளி நிற பெரோடுவா அல்சா வாகனம் திடீரென மின்னலால் தாக்கப்படும் காணொளி, அவ்வாகனத்திற்குப் பின்னாலிருந்த வாகன
‘dashcam’-இல் பதிவாகியுள்ளது.

இத்தாக்குதலால், வாகனத்திற்கும் பயனர்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், வைரலாகிய அக்காணொளிக்கு பல்வேறு விதமான கருத்து குவியல்கள் வந்த வண்ணமாக உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!