
கோத்தா கினபாலு, ஏப் 25 -Rumah Mesra Sabah Maju Jaya வீடமைப்பு திட்ட குத்தகையாளர் மற்றும் மேலும் சில தனிப்பட்ட நபர்களிடமிருந்து 40,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதன் தொடர்பில்
சமூக மேம்பாட்டுத்துறையின் அதிகாரி ஒருவரை சபா , சண்டகான் MACC கிளை கைது செய்து தடுத்து வைத்துள்ளது.
50 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழியை விசாரணைக்காக மே 1ஆம் தேதிவரை ஏழு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை நீதிபதி ஸைனி பிஷிர் இன்று காலை பிறப்பித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டுவரை 40,000 ரிங்கிட் லஞ்சத்தை அந்த நபர் பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட அந்த வீடமைப்பு திட்டதை சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் குத்தகையாளருக்கு வழங்குவதற்கு இந்தப் பணத்தை அந்த நபர் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு சண்டகான் MACC அலுவலகத்திற்கு விளக்கம் அளிப்பதற்காக அந்த சந்தேகப் பேர்வழி வந்தபோது கைது செய்ப்பட்டார்.
இதனிடையே அந்த நபர் கைது செய்யப்பட்டதோடு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் 2009 ஆம் ஆண்டு சட்டத்தின் 17 ஆவது பிரிவு (a) யின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சபா எம்.ஏ.சி.சியின் இயக்குநர் டத்தோ Karunanithy Y. Subbiah உறுதிப்படுத்தினார்