
ஷா ஆலாம், செப்டம்பர்-11 – சிலாங்கூரில் MyKasih திட்டத்தின் மூலம் B40 குடும்பங்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையிலிருந்து நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சந்தேகத்தின் பேரில், ஒரு பள்ளி முதல்வர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் கைதுச் செய்யப்பட்டார்.
ஏழை மாணவர்களுக்கு உணவு, கல்வி மற்றும் பயிற்சி வழங்குவதற்காக நிறுவப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்திடமிருந்து சுமார் RM16,000 பணத்தை அம்மாது முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அவர் மீது இன்று ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என சிலாங்கூர் MACC இயக்குனர் அஸ்வான் ராம்லி கூறினார்.
50 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர், முன்னதாக சிலாங்கூர் MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் அளிக்கச் சென்ற போது கைதானார்.
தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக 2009 MACC சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.