
புத்ரா ஜெயா, ஜூலை 28 – குறைந்த நடமாட்டம் கொண்ட குறிப்பாக மருத்துவ சேவையை நாடும் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் முயற்சியாக, BAS.MY Medik கூடுதல் சேவையை அறிமுகப்படுத்தும். சக்கர நாற்காலிகளில் இருப்பவர்கள் அல்லது டயாலிசிஸ் எனப்படும் சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள் தவிர வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் போன்ற குறைந்த இயக்கம் கொண்ட பயணிகளை ஏற்றிச் செல்ல குறைந்தபட்சம் ஒரு வேனையாவது வழங்க வேண்டும் என்று BAS.MY நடத்துனர்களுக்கு போக்குவரத்து அமைச்சு நிபந்தனைகளை விதித்திருப்பதாக அதன் அமைச்சர் அந்தோனி லோக் ( Anthony Loke Siew FooK ) கூறினார். BAS.MY Medik சேவை மலிவு விலை கட்டணத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இது எல்லா இடங்களிலும் ஒரு பிரச்சனை, எல்லா மாநிலங்களிலும் போக்குவரத்து சேவைகள் தேவைப்படும் குழுக்கள் உள்ளன. ஒருவர் தனது வீட்டிலிருந்து டயாலிசிஸ் மையத்திற்கு ஒரு டாக்ஸி அல்லது ஏதேனும் சேவையைப் பயன்படுத்தினால், கட்டணம் ஒவ்வொரு முறையும் 20 ரிங்கிட் , 30 ரிட்கிட்டாக இருக்கலாம்.
இந்த BAS.MY மெடிக் மருத்துவ பயணிகளை மிகவும் மலிவான கட்டணத்தில் சிகிச்சை மையத்திற்கு அனுப்பும். விரைவில் பேருந்து நடத்துநர்களால் இச்சேவை அறிமுகப்படுத்தப்படும் என கங்கர் BAS.MY பேருந்து நிறுத்த சேவை உருமாற்றத் திட்டத்தின் தொடக்க விழாவில் அந்தோனி லோக் தெரிவித்தார்.