Latest
குற்றத்தை ஒப்புக்கொண்ட GISB Holdings தலைமை நிர்வாக அதிகாரி; சட்டவிரோத அமைப்பில் உறுப்பினர் என்பது உண்மைதான்

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 7 – GISB Holdings Sdn Bhd (GISBH) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான நசீருத்தீன் அலி (Nasiruddin Ali) உட்பட மேலும் 21 பேர், சட்டவிரோத அமைப்பில் உறுப்பினராக இருந்த குற்றத்தை இன்று நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.
நீதிமன்றம் நசீருத்தீன் மற்றும் 12 ஆண்களுக்கு தலா 15 மாதங்கள் சிறைத் தண்டனையையும், அவரின் மனைவி உட்பட எட்டு பெண்களுக்கு தலா 4,500 ரிங்கிட் அபராதத்தையும் விதித்தது. அவர்கள் அனைவரும் GISBH அமைப்பின் மூத்த தலைவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வழக்கு தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவுச் செய்யப்பட்டு, மேல் விசாரணை தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்குற்றமானது, கடந்த 2020 அக்டோபர் முதல் 2024 செப்டம்பர் வரை, ரவாங், பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது.



