Latestமலேசியா

குற்றத் தடுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு சங்கம் ஏற்பாட்டில் ‘இளைஞர்கள் ஒன்றிணைந்து குற்றங்களை ஒழிப்போம்’ நிகழ்ச்சி

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 11 – குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில், ‘இளைஞர்கள் ஒன்றிணைந்து குற்றங்களை ஒழிப்போம்’ எனும் நிகழ்ச்சி பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்றது.

குற்றங்கள் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கையும், இளைஞர்கள் இணையக் குற்றங்களுக்குப் பலியாவதைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் உன்னத நோக்கில் இது நடத்தப்பட்டது.

சொற்பொழிவுகள், கண்காட்சிகள், வினாடி வினா போட்டிகளோடு இந்நிகழ்ச்சி துவக்கம் கண்டது.

அதேவேளையில், நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தங்கராஜா மற்றும் சிறைத் துறையின் முன்னாள் ஆணையர் அண்ணாதுரை காளிமுத்து ஆகியோரின் ஊக்கமளிக்கும் கருத்தரங்கமும் இடம்பெற்றது.

குழந்தைகள் சமூக பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க, பெற்றோர்கள்தான் எப்போது கண்காணிக்க வேண்டும் என்றும், பள்ளியில் ஆசிரியர்களும் மாணவர்களை நெறிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஜெகதீன் முனுசாமி இந்நிகழ்ச்சியில் வலியுறுத்தினார்.

சிலாங்கூர் மாநில மலேசிய அமைப்புகளின் பதிவுத் துறை, பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டிலும் மிக நேர்த்தியாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என மொத்தம் 200 பேர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!