குவாலா சிலாங்கூர், ஜனவரி-7 – குவாலா சிலாங்கூர், பாசீர் பெனாம்பாங்கில் நேற்று பிற்பகலில் 3 வாகனங்கள் விபத்துக்குள்ளாகி தீப்பற்றியதில், நால்வர் காயமடைந்தனர்.
மேலும் மூவர் காயமின்றி தப்பியதாக சிலாங்கூர் தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.
செம்பனை எண்ணெய் ஏற்றியிருந்த டாங்கி லாரி, Toyota Alphard MPV வாகனம் மற்றும் Proton Saga காரை மோதியதே விபத்துக்குக் காரணம்.
காயமடைந்தவர்கள் முறையே லாரி ஓட்டுநர், காரோட்டி மற்றும் MPV வாகனத்தில் பயணித்த இருவராவர்.
காயமின்றி தப்பிய மூவரில் இருவர் குழந்தைகள், மற்றொருவர் குடும்ப மாது.
15 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது.