Latest
குவாலா பிலா காட்டுப் பகுதியில் பெத்தாய் தேட சென்றவர் துப்பாக்கிச் சூட்டில் காயம்

குவாலா பிலா, டிசம்பர்-13, நெகிரி செம்பிலான், குவாலா பிலா காட்டுப் பகுதியில் பெத்தாய் தேட சென்ற 47 வயது ஆடவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.
இச்சம்பவம், செனாலிங், கம்போங் மாசோப் அருகேயுள்ள காட்டில் நிகழ்ந்தது.
தனியாக சென்றிருந்த அந்நபர், அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, தற்போது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் இன்னும் கைதுச் செய்யப்படவில்லை.
பொது மக்களிடம் தகவல் இருந்தால் போலீஸாரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



