குவா மூசாங், செப்டம்பர் -9 – கிளந்தான் குவா மூசாங்கில் குருவிகளைப் பிடிப்பதற்காக பொறி வைக்கச் சென்ற ஆடவர் கரடி தாக்கி படுகாயமடைந்துள்ளார்.
Jerek, Kampung Dalam Senduk-கில் உள்ள தோட்டமொன்றில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
கரடி தன் கூரிய நகங்களால் கீரியதில் 33 வயது அவ்வாடவரின் தலை மற்றும் கால்களில் சதை கிழிந்துபோனது.
இரத்த வெள்ளத்தில் கிடந்தவர், கிராம மக்களின் உதவியுடன் குவா மூசாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அச்கிருந்து குபாங் கெரியான் HUSM மருத்துவமானைக்கு அவர் மாற்றப்பட்டார்.
அங்கு அவருக்குத் தலையிலும் காலிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவிருப்பதாக அவரின் தங்கை தெரிவித்தார்.
தனது அண்ணன் அந்த தோட்டத்து பழைய வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், இதுநாள் வரை அப்பகுதியில் கரடி நடமாட்டம் இருந்ததாக கூறியது இல்லையென்றும் சொன்னார்.
தாக்கியது, சூரியக் கரடி என நம்பப்படுகிறது; அதனைப் பிடிக்கும் முயற்சியில் வனவிலங்குத் துறை ஈடுபட்டுள்ளது.