
குவா மூசாங், ஜனவரி-14-கிளந்தானில் நேற்று பயிற்சிக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட கோர விபத்தில், மூவர் உயிரிழந்தனர்.
அவர்கள் முறையே 33 வயது Mohamed Saiful Kamaruzaman, 47 வயது Nik Azmi Nik Othman மற்றும் 55 வயது Nik Razizi Nik Rahim ஆவர்.
இவ்விபத்து மதியம் 12.40 மணிக்கு கம்போங் பாலோ அருகே உள்ள குவா மூசாங்–குவாலா கிராய் சாலையில் நிகழ்ந்தது.
42 வயது ஓட்டுநருடன் அவர்கள் பயணித்த MPV வாகனம் ஒரு வேனுடன் மோதியது.
விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது, பலத்த காயத்தால் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
MPV ஓட்டுநர், வேன் ஓட்டுநர் மற்றும் பயணிகள் காயமடைந்து குவா மூசாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.



