
ஜோகூர் பாரு, பிப்ரவரி-27 – ஜோகூர் கூலாயில், மின்னணுக் கழிவுகள் எனப்படும் பயன்படுத்தப்படாத மின்சார மற்றும் மின்னணுக் கருவிகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்போங் பாரு செங்காங்கில் சட்டவிரோதமாக இயங்கி வரும் அத்தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியதில், 15 பேர் கைதானதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் கூறினார்.
மாநில சுற்றுச் சூழல் துறை மற்றும் கூலாய் நகராண்மைக் கழகத்தின் ஒத்துழைப்புடன் அச்சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கைதானவர்களில் ஓர் உள்ளூர் ஆடவரும் அடங்குவார்; மற்றவர்கள் முறையே சீனா, மியன்மார், வங்காளதேசம், இந்தோனீசிய நாட்டவர்கள் ஆவர்.
20 முதல் 49 வயதிலான அவர்கள் அனைவரும் பல்வேறு குற்றங்களுக்காக கைதானதாக குமார் சொன்னார்.
இதில் மொத்தமாக 43 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
348 சாக்குகளில் தகரத் தகடுகள், 612 சாக்குகளில் வெட்டப்பட்ட automative பேட்டரிகள், automative பேட்டரிகள் கொண்ட 33 பெட்டிகள் மற்றும் தட்டுகள், தூசி மாசு கட்டுப்பாட்டுக்கான 2 உபகரணங்கள், ஒரு பேக்கிங் அடுப்பும் அவற்றிலடங்கும்.
இது தவிர, மின்சாரப் உபரிபாகங்களின் கழிவுகள், பேட்டரி தண்ணீர் டாங்கிகள், மின் கழிவுகள், பேட்டரிகள், பேட்டரி தண்ணீர் , ஈயம் மற்றும் மின் கழிவுகளைப் பதப்படுத்தும் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவையனைத்தும் மேல் விசாரணைக்காக ற்றுச் சூழல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.