
சிக் , நவ 8 – கெடாவில் சிக், Jalan Batu 8 ஆவது மைலில் Maktab Mahmud முன்புறம் Perodua Myvi , Perodua Kancil மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இருவர் காயம் அடைந்தனர். மைவி கார் ஓட்டுனரும் Kancil கார் ஓட்டுனரும் தங்களது காரில் சிக்கிக்கொண்டதால் கால்கள், முகம் மற்றும் தொடையில் கடுமையான காயங்களுக்கு உள்ளாகினர். சிக் தீயணைப்பு படை வீரர்கள் சிறப்பு சாதனங்களை பயன்படுத்தி அவர்களை அவ்விரு கார்களிலிருந்தும் மீட்டதாக தீயணைப்பு அதிகாரி Zulkhairi Mat Tanjil தெரிவித்தார்.
நேற்றிரவு மணி 9.11 அளவில் இந்த விபத்து தொடர்பான தகவலை பெற்றதாக Zulkhairi கூறினார். பெக்கான் சிக்கை நோக்கிச் சென்ற Kancil கார் ஓட்டுனர் , Perodua Myvi கார் வந்த எதிர் திசையில் நுழைந்ததை தொடர்ந்து இந்த விபத்து நிகழ்ந்தது. Kancil கார் ஓட்டுனர் தூக்கக் கலக்கத்தில் அசந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.