அலோர் ஸ்டார், செப்டம்பர் 11 – தீயணைப்புத் துறையில் பெண்களின் ஈடுபாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படமான ‘வீரா II’-யின் டீசர் (teaser) தற்போது வெளியாகியுள்ளது.
கெடா மாநில தீயணைப்பு மீட்புத் துறையின் முயற்சியில் இரண்டாவது முறையாக மலாய் மொழியில் மலரவுள்ள இந்த குறும்படம், தீயணைப்பு வீராங்கனைகள் சந்திக்கும் சவால்களும், அவர்களின் போராட்டங்களுக்குப் பின் கிடைக்கும் வெற்றிகளைக் காட்சிப்படுத்தும் வகையில் உருவாக்கம் கண்டுள்ளது.
அவ்வகையில், செப்டம்பர் 16-ஆம் திகதி யூ.டி.யூபில் ‘வீரா II’ குறும்படம் வெளியீடு காணவிருக்கிறது.
மலேசிய தினம் அன்று வெளியீடு காணவுள்ள இந்த குறும்படத்தை பொது மக்கள் கண்டு களிக்குமாறு கெடா தீயணைப்பு மீட்புத் துறையின் துணை அமலாக்க அதிகாரியும், இக்குறும்படத்தின் எழுத்தாளருமான ஹேமநாதன் சுப்ரமணியம் அன்புடன் கேட்டுக் கொண்டார்.