Latestமலேசியா

கெடா ம.இ.கா இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் Himpunan Belia 2024 நிகழ்வு; இளைஞரணியில் இணைந்த 160 பேர்

சுங்கை பட்டாணி, டிசம்பர்-22,

கெடா மாநில ம.இ.கா இளைஞர் பிரிவின் ஏற்பாட்டில் சுங்கை பட்டாணியில் Himpunan Belia 2024 என்ற பயனுள்ள நிகழ்ச்சி நேற்று முந்தினம் நடைபெற்றது.

ஸ்ரீ மலேசியா ஹோட்டலில் நடைபெற்ற அந்நிகழ்வில் சுமார் 200-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்கள் பங்கேற்றனர்.

ம.இ.கா இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன், நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

அவருடன் எஸ்.கே.சுரேஷ், மத்திய செயலவை உறுப்பினர் Dr டி.நோவலன் ஆகியோரும் வந்திருந்தனர்.

அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 160 இளைஞர்கள், ம.இ.கா இளைஞர் பிரிவின் சமுதாயக் களப்பணியால் ஈர்க்கப்பட்டு, கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இளைஞர் பிரிவின் மூலம் அவர்களும் பணியாற்ற வந்திருப்பது குறித்து அர்விந்த் மகிழ்ச்சித் தெரிவித்தார்.

இது போல மாநிலம் வாரியாக இளைஞர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையானவற்றைக் கேட்டறிந்து, ஆர்வமுள்ளவர்களை இளைஞர் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இளைஞர்கள் ஒன்றிணைந்தால் சமுதாயத்தின் கரங்களை வலுப்படுத்த முடியுமென அர்விந்த் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இவ்வேளையில், அந்த Himpunan Belia நிகழ்வில் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புகளைத் தேடும் இளைஞர்களுக்குத் தேவையான தகவல்கள் பரிமாறப்பட்டதாக கெடா ம.இ.கா இளைஞர் பிரிவின் தலைவர் ஸ்ரீ சத்ய ராவ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

தெக்குன், சொக்சோ, AIMST பல்கலைக்கழகம், Belia Mahir, Unitar கல்லூரி உள்ளிட்ட 6 அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்பாளர்களுக்கு பல பயனுள்ள தகவல்களை வழங்கினர்.

குறிப்பாக தொழில் மற்றும் வேலை வாய்ப்ப்புக் குறித்தத் தகவல்கள், இலவச தொழில்நுட்பப் பயிற்சிக்கான பதிவு, வர்த்தகக் கடனுதவி வாய்ப்புகள், உயர் கல்வி வாய்ப்பு, உபகாரச்சம்பளம் போன்ற விவரங்கள் பகிரப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!