
கோலாலம்பூர், செப்டம்பர்-11 – 2025 விஷச் சட்டத் திருத்தம் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டுமென, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாசலம் வலியுறுத்தியுள்ளார்.
அச்சட்டம் தற்போது கெத்தும் பான தயாரிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டை மட்டுமே தண்டிக்கிறது.
ஆனால் பயிரிடலுக்கு தடையில்லை; சட்டத்தில் உள்ள இந்த ஓட்டைகளால் குற்றச் செயல் கும்பல்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
எனவே கெத்தும் செடி பயிரீட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார் அவர்.
அதே நேரத்தில், எட்டோமிடேட் (etomidate) கட்டுப்பாடு மலேசியாவில் மிகவும் தளர்வாக உள்ளது.
சிங்கப்பூர் ஏற்கனவே அதை போதைப்பொருள் C வகையில் சேர்த்துள்ளது.
ஆனால் மலேசியாவோ இன்னும் 1952 விஷச் சட்டத்தின் கீழ் அதனைக் கட்டுப்படுத்தப்பட்டப் பொருளாக வைத்திருப்பது கவலையளிக்கிறது; அது சீக்கிரமே அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும் மக்களின் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு அவசியமானவை என இன்று வெளியிட்ட அறிக்கையில் லிங்கேஷ் வலியுறுத்தினார்.