
குவந்தான் , ஆகஸ்ட்-11- பெந்தோங், Jalan Turun Genting Highlands , 17.3ஆவது கிலோமீட்டரில் 20 வியட்னாம் பிரஜைகளையும் உள்நாட்டைச் சேர்ந்த அறுவரையும் ஏற்றிச் சென்ற சுற்றுலா பஸ் மற்றும் இரு கார்கள் விபத்திற்குள்ளாகின.
21 பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டியையும் ஏற்றிச் சென்ற பஸ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து Perodua Myvi கார் மற்றும் Toyota Innova வாகனத்தின் பின்னால் மோதியதைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் சாலையோரத்தில் கவிழ்ந்தன.
இச்சம்பவத்தில் பஸ் விபத்தில் பஸ் ஓட்டுநர் சொற்ப காயத்திற்கு உள்ளான வேளையில் அனைத்து பயணிகளும் காயமின்றி உயிர்தப்பினர்.
சிறு அளவில் காயத்திற்குள்ளான Perodua Myvi கார் ஓட்டுநர் பொதுமக்களால் பெந்தோங் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் அக்காரின் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
மேலும் Toyota Innova வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் அதன் பயணிகள் எவரும் காயம் அடையவில்லை.
அந்த சுற்றுலா பஸ் கெந்திங்கிலிருந்து கோம்பாக், பத்துமலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது விபத்திற்குள்ளானதாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.