
நைரோபி, ஏப்ரல்-21- ஆப்ரிக்க நாடான கென்யாவில் சிங்கம் தாக்கியதில் 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.
தலைநகர் நைரோபிக்கு வெளியே உள்ள தேசியப் பூங்காவில் சனிக்கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்தது.
சிங்கம் தாக்கியதை நேரில் கண்ட இன்னொரு சிறுமி பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து இரத்தக்கறை படிந்த தடயங்களைத் தேடிச் சென்ற மீட்புக் குழுவினர், ஆற்றோரமாக சிறுமியின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
இடுப்புக்குக் கீழே அச்சிறுமிக்கு மோசமான காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும் சிங்கத்தைக் காணவில்லை.
இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியுள்ள அதிகாரிகள், சிங்கத்தைப் பிடிக்க பொறி கூண்டையும் பொருத்தியுள்ளனர்.
கென்யாவில் முன்னதாக வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் 54 வயது ஆடவர் யானைத் தாக்கி உயிரிழந்தார்.