
கெப்போங், மார்ச் 13 – கெப்போங் ஜாலான் ஜிஞ்சாங் பாருவில் அமைந்துள்ள ஒரு பொது விளையாட்டு பூங்காவில் தீ வைக்கப்பட்டு நடத்தப்பட்ட பொது சொத்து சேதாரத்தை தொடர்ந்து, கோலாலம்பூர் மாநகர மன்றமான , DBKL விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சேதாரத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த பூங்காவின் விளையாட்டு மைதானம் கடுமையாக சேதாரமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்பு 100,000 ரிங்கிட் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பொறுப்பற்ற செயலை யார் செய்தார் என்ற விவரம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இதனிடையே பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் பொறுப்பில்லாத இந்த செயலை கடுமையாக சாடியுள்ளது DBKL.