கெரிக், அக்டோபர்-24 – கிளந்தான், கெரிக்கில் கிழக்கு-மேற்கு சாலைக்குள் கூட்டமாக புகுந்த காட்டு யானைகள், குறைந்தது 5 வாகனங்களைச் சேதப்படுத்தின.
நேற்றிரவு 9 மணிக்கு சுங்கை லேபேவின் 9-வது கிலோ மீட்டரில் சாலைத் தடுப்புச் சோதனை அருகில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாகனங்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
எனினும் அதில் யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காங்கள் துறையான PERHILITAN அச்சம்பவம் குறித்து இன்னும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.