
செப்பாங், பிப்ரவரி-15 – சிலாங்கூர், செப்பாங் கோத்தா வாரிசான் எனுமிடத்தில் சாலையோரம் அவித்த மற்றும் வாட்டிய சோளங்களை விற்கும் மலாய்க்கார குடும்பம், இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தியர்களுக்கு சோளம் கிடையாது என அறிவிப்பு அட்டையை வைத்திருப்பதாக வெளியான வீடியோ வைரலானது.
“Sorry ini jagung tiada jual sama orang keling” என்ற இனத்துவேச வார்த்தை அந்த அட்டையில் இடம் பெற்றிருக்கிறது.
அது, அவ்வழியாகச் சென்ற ஓர் இந்தியப் பெண்ணின் கண்ணில் பட, அவரும் அந்த வியாபாரியை நெருங்கி நியாயம் கேட்டிருக்கிறார்.
ஆனால் அந்த உரிமையாளரோ அப்பெண்ணிடம் சற்று மூர்க்கத்தனமாக நடந்துகொண்டுள்ளார்.
பின்னர் மீண்டும் வீடியோ எடுக்க முற்பட்ட போது, வியாபாரியின் மனைவி அந்த அறிவிப்பு அட்டையை எடுத்து பின் பக்கமாகச் சென்றிருக்கிறார்.
ஹோலிடே இன் ஹோட்டல் எதிர்புறமுள்ள அந்த அங்காடி கடைக்கு பல்லின மக்களும் வந்து சென்றாலும், சர்ச்சைக்குரிய அந்த அறிவிப்பு குறித்து இதுவரை யாரும் கேட்டார்களா எனத் தெரியவில்லை.
இவ்வேளையில் அந்த வீடியோ தொடர்பாக போலிஸ் புகார் செய்யவேண்டுமென வழியுறுத்தி வருகிறார்கள்.