
தானா ராத்தா, அக்டோபர் -17,
கேமரன் மலையிலுள்ள எட்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு மொத்தம் 13,000 ரிங்கிட் கல்வி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியுதவியை தானா ராத்தா மாநில சட்டமன்ற உறுப்பினர் ஹோ சி யாங் (YB Ho Chi Yang) வழங்கினார்.
நிதி ஒதுக்கீடு பல்வகை கல்வி முறைமையைப் பாதுகாத்து, கல்வித் தரத்தை மேம்படுத்தும் முயற்சி என்றும் பள்ளிகள் தங்களது தேவைக்கு ஏற்ப நிதியை பயன்படுத்தி வசதிகளை மேம்படுத்துவதுடன் மாணவர் வளர்ச்சி நடவடிக்கைகளை நடத்தலாம் என அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
இதில் ப்ளூ வேலி தமிழ்ப்பள்ளி (SJKT Blue Valley) கூடுதல் 5000 ரிங்கிட்டுடன் சேர்த்து மொத்தம் 6,000 ரிங்கிட் நிதியுதவியைப் பெற்றது. இது பள்ளி வளாகத்தில் புதிய கூடைப்பந்து மைதானம் அமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் என்று அறியப்படுகின்றது.
பல்வகை கல்வி முறை என்பது இணைப்பை உருவாக்கும் பாலம் என்றும் பல மொழி மற்றும் கலாச்சாரங்களின் வழியாகக் குழந்தைகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, பரஸ்பர மரியாதையுடன் வளர்வதே நமது சமூகத்தின் உண்மையான வலிமை என்றும் ஹோ சி யாங் தெரிவித்தார்