
கோலாலம்பூர், செப்டம்பர் 30 –
புத்ராஜாயாவில் ‘staycation’ சென்ற தம்பதியரின் அனுபவம் துயரமாக மாறிய சம்பவம் வலைத்தளத்தில் பெரும் வைரலாகியுள்ளது.
அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறை படுக்கையில் நடு இரவில் மூட்டைப்பூச்சி வலம் வந்ததை கண்டு அத்தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டிக் டோக்கில் பதிவிடப்பட்ட அந்த வீடியோ தற்போது 9 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
வீடியோவில், இரவு 12.30 மணியளவில் தலையணையில் நகர்ந்த சிறிய கருப்பு பொருளை தம்பதியர் கவனித்தபோது, அது எறும்பு அல்ல, மூட்டைப்பூச்சி என்றும், அருகே முட்டைகளும் இருப்பதையும் கண்டறிந்தனர்.
அவர்கள் உடனடியாக house keeping பிரிவுக்கு புகார் செய்தபோதும், எந்த மன்னிப்பும் கோராமல் புதிய அறைக்கான கார்டை மட்டுமே அவர்கள் வழங்கினார்கள் என்று பாதிக்கப்பட்ட தம்பதியினர் மனம் நொந்து கூறினர்.
அந்த இரவு தாங்கள் நிம்மதியாக தூங்கவில்லை என்றும் அடுத்த நாள் கவுண்டரில் புகார் அளித்தபோதும், பணியாளர் வெறும் புன்னகையுடன் “ஆமா? உண்மையா?” என்ற பதிலையே வழங்கியதாகவும் அவர்கள் மிகுந்த வேதனையுடன் குற்றம் சாட்டினர்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
நெட்டிசன்கள், ஹோட்டல் மேலாண்மையின் தொழில்முறை இன்மையை கண்டித்து, TripAdvisor மற்றும் Google Reviews-ல் விமர்சனம் இட வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகின்றனர்.